மத்திய பிரதேசத்தில் கமல்நாத் மெஜாரிட்டியை நிரூபிப்பார்- நாராயணசாமி நம்பிக்கை

மத்தியபிரதேசத்தில் கமல்நாத் அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி
நாராயணசாமி
Published on

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய பிரதேச அரசியல் நிலை குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், கர்நாடகாவில் செய்தது போல மத்திய பிரதேசத்திலும் பா.ஜனதா ஜனநாயக படுகொலை நிகழ்த்த நினைக்கிறது. பா.ஜனதாவின் சூழ்ச்சி வலையில் ஜோதிராதித்ய சிந்தியா விழுந்து விட்டார். அவர் தான் செய்தது இமாலய தவறு என்பதை விரைவில் உணர்ந்துகொள்வார்.

பா.ஜனதா அவரை பயன்படுத்திக்கொண்டு பின்னர் தூக்கியெறியும். மத்தியபிரதேசத்தில் கமல்நாத் அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பார் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com