பாஜகவில் 7 கோடி பேர் புதிய உறுப்பினர்கள் - ஜே.பி.நட்டா

புதிய உறுப்பினர் சேர்க்கை மூலம் பா.ஜ.க.வில் 7 கோடி பேர் இணைந்துள்ளனர் என அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. செயல் தலைவர் ஜே பி நட்டா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜூலை மாதம் 6-ம் தேதி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், 7 கோடி பேர் புதிய உறுப்பினர்களாக பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். இதன்மூலம் பா.ஜ.க. உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 18 கோடியாக உயர்ந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com