

வேலூர்:
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அ.தி.மு.க. எம்.பி. கோ.அரி பேசுகையில்:-
தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் சட்டபேரவையில் மயங்கி விழுந்த போது மடியில் தூக்கி வைத்து எம்.ஜி.ஆர். கண்கலங்கினார் என்பதை நினைக்கும்போது கர்ணன் படத்தில் வரும் இறுதி காட்சியில் கர்ணனை அவரது தாய் மடியில் தூக்கி வைத்து கூறும் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. அதை எல்லாம் கூறவிரும்பவில்லை.
துரைமுருகன் எம்.ஜி.ஆர்.தான் தன்னை உருவாக்கினார், படிக்க வைத்தார் என உருக்கமாக பேசினார்.
இப்படிபட்ட துரைமுருகன் இருக்க வேண்டிய இடம் அ.தி.மு.க. என்றார்.
இதனை கேட்டதும் அரங்கில் இருந்த அ.தி.மு.க.வினர் ஆரவாரம் செய்து கோஷம் எழுப்பினர். பலத்த கைத்தட்டல் எழுந்தது.
மேடையில் இருந்த துரைமுருகன் உள்பட அனைவரும் சிரித்தனர். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews