ஜோ ரூட், ஸ்மித், கேன் வில்லியம்சனை விட கோலி சிறந்தவர்: மொகமது அமிர் சொல்கிறார்

ஜோ ரூட், ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோர் சிறந்தவர்கள்தான். இவர்களை விட விராட் கோலி சிறந்தவர் என்று மொகமது அமிர் கூறியுள்ளார்.
ஜோ ரூட், ஸ்மித், கேன் வில்லியம்சனை விட கோலி சிறந்தவர்: மொகமது அமிர் சொல்கிறார்
Published on

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிர். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிராக விராட் கோலி, ரோகித் சர்மா, தவான் ஆகியோர் விக்கெட்டுக்களை தொடக்கத்திலேயே வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போதைய கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள். இந்த நான்கு பேரில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் விவாதம்.

இந்நிலையில் மொகமது அமிர் டுவிட்டர் மூலம் ரசிகர்களிடம உரையாடினார். அப்போது, உங்கள் பார்வையில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று மேலே குறிப்பிட்டுள்ள நான்கு பேரின் பெயரை தெரிவித்து கேள்வி கேட்டார்.

அதற்கு ‘‘நான்கு பேரும் சிறந்தவர்கள்தான். என்னுடைய தனிப்பட்ட முறையில் விராட் கோலிதான் சிறந்தவர்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com