

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள். இன்றுடன் 68 வயது முடிவடைந்து 69-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி கட்சியினர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
விஜயகாந்த் பல்லாண்டு வாழவும் நலமும் குணமும் திடமும் பெற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.