

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கொரோனா தொற்று உறுதியான அதிமுக எல்.எல்.ஏ. பழனி முழுமையாக நலமடைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:
எல்.எல்.ஏ. பழனி நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.