செயற்கை கோள் தயாரித்த மாணவர்கள் குழுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை தயாரித்த மாணவர்ள் குழுவுக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செயற்கை கோள் தயாரித்த மாணவர்கள் குழுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை:

செயற்கைக்கோள் தயாரித்த மாணவர்களை பாராட்டி மு.க.ஸ்டாலின் முகநூலில் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:-

உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இன்று காலை என்னை நேரில் சந்தித்தனர்.

3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில், 64 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய செயற்கைக்கோளை உருவாக்கி, அதனை நாசா அமைப்பு விண்ணில் செலுத்தியது பாராட்டுக்குரிய ஒன்று.

சுமார் 240 நிமிடங்கள் விண்ணில் பறந்த செயற்கை கோளை காண்பித்து, அதன் திட்டப்பணிகள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவின் ஏவுகணை மனிதரான மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை நினைவுகூரும் வகையில் ‘கலாம்சாட்’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோளை வடிவமைத்த, தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ரிபாத் சாருக் மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன்.

தமிழகத்திலிருந்து இளம் விஞ்ஞானிகளாக உலக அரங்கில் நம்மை பெருமைபட வைக்கும் இதுபோன்ற சாதனைகள் இன்னும் பெருக வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com