இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்ற நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின்
மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின்
Published on

பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இதனால் ஆறு மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராகியுள்ளதால், அவரின் முதல்வர் பதவிக்கு இனிமேல் எந்த ஆபத்தும் இல்லை.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மம்தா பானர்ஜியின் அமோக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அமோக வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துகள்.

இந்த வெற்றி மேற்கு வங்காள மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com