மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா- தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தூத்துக்குடி ஸ்பிக்நகர் பகுதியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

முள்ளக்காடு:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உத்தரவின்படி ஸ்பிக்நகர் பகுதி தி.மு.க. சார்பில் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்று ஸ்பிக் நகர் பகுதி வார்டுகளில் கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 

இதையடுத்து எம்.சவேரியார் புரம், காந்திநகர், ஹெவிவாட்டர் காலனி, ராஜீவ்நகர், அத்திமரப்பட்டி, தங்கமணிநகர் மற்றும் ஸ்பிக்நகர் பஜார் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தி.மு.க. கொடியேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் ஸ்பிக்நகர் பகுதி செயலாளர் பொன்னரசு, இளைஞரணி தங்கராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சுயம்பு, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராஜசேகர், 59-வது வட்ட பிரதிநிதி பொன் ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் ராமசாமி, எப்ரேம், வட்ட செயலாளர்கள் மரியகிராஜன், அந்தோணிராஜ், ரகு, ராஜசேகர், இளைஞரணி அருண்குமார், சக்தி, ராஜ், ரூபன், ஜெயபாண்டி, தர்மா, மகளிரணி சந்திரா, பிலோமினா, ஜெயா, வட்ட கழக நிர்வாகிகள் சீனிவாசன், செல்வக்குமார், ஆரோக்கியராஜ், முருகன், மரியசெல்வம் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com