நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கும் திட்டம்- அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்

திண்டுக்கல்லில் ரமலானையொட்டி நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்கும் திட்டத்தை அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
நோன்பு கஞ்சி
நோன்பு கஞ்சி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் ரமலானையொட்டி நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சீனிவாசன் கூறியதாவது:-

வக்பு வாரிய ஆலோசனைப்படி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் பச்சரிசியை பிரித்து அந்தப்பகுதியிலுள்ள ஏழைகளின் வீடுகளில் தன்னார்வலர் உதவியுடன் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 24,820 பேர் பயன்பெறும் வகையில் 111.690 டன் பச்சரிசி வழங்கப்படுகிறது.

திண்டுக்கல்லில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 3ஆயிரம் பேருக்கு அரிசி, சேமியா, பருப்பு, காய்கறிகள் ஆகியவை அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றார். டி.ஆர்.ஓ., கந்தசாமி, எஸ்.பி., சக்திவேல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், பரமசிவம் எம்.எல்.ஏ., பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com