நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் தோற்பது உறுதி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆர்பி உதயகுமார்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்
Published on

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் நாங்குநேரி தொகுதியிலேயே இருக்கின்ற, அந்த மண்ணின் மைந்தனான நாராயணனை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள்.

ஆகவே நமக்கு உள்ளூர் வேட்பாளர். அந்த மண்ணின் வாசனையை அறிந்தவர். மக்களுடைய தேவைகளை அறிந்து, புரிந்து அவரால் செய்ய முடியும்.

இன்றைக்கு வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தகுதி என்ன? அவருடைய கட்சி பணி என்ன? அவருக்கான மக்களின் தொடர்பு என்ன? அவர்களுடைய தொடர்பு குறித்து அ.தி.மு.க. சொல்வதற்கு முன்பாகவே மக்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது.

எங்களுடைய இலக்காக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசம் வைத்திருக்கிறோம். ஆனால் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் குறையாமல் வெற்றி பெறுவோம் என்பது நமது நம்பிக்கையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com