திமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Published on

அவனியாபுரம்:

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து அ.தி.மு.க. வாக்களித்துள்ளது. நாட்டின் வளர்ச்சி மற்றும் தேச வளர்ச்சியை கருத்தில் கொண்டே அ.தி.மு.க. ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு கானல் நீராகி போனதால் விரக்தியில் பேசுகிறார்.

தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசை ஆதரிப்போம். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தான் மதவாத கட்சி.

இலங்கை தமிழர்களுக்கு தற்போது குடியுரிமை வழங்க வேண்டும் என்று கூறும் தி.மு.க. மற்றும் காங்கிரசார் தங்கள் ஆட்சி காலத்தில் என்ன செய்தார்கள்?

இலங்கை தமிழர் குடியுரிமை விவகாரத்தில் தி.மு.க. தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இலங்கை தமிழர்களின் குடியுரிமை குறித்து தமிழக முதல்வர் மத்திய அரசிடம் பேசி முடிவு செய்வார். இலங்கை தமிழர் பற்றி பேச தி.மு.க., காங்கிரசுக்கு அருகதை இல்லை.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி போல உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com