சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ஆய்வு- அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், மாஃபா பாண்டியராஜன், சுகாதாரத்துச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

கொரோனா சங்கிலி தொடரை துண்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் கொரோனா சமூக பரவலாக மாறிவிடக்கூடாது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

12 நாள் ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com