ஓ.பி.எஸ்.அணி எம்.எல்.ஏ.க்கள் வரத் தயாராக இருக்கிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

ஓ.பி.எஸ். அணியில் இருந்து எங்கள் அணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வரத் தயாராக இருக்கிறார்கள் என நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ்.அணி எம்.எல்.ஏ.க்கள் வரத் தயாராக இருக்கிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை:

சென்னை அண்ணாசதுக்கத்தில் 100 மீனவர்கள் உயிர் காக்கும் பயிற்சியை நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார். அப்போது நிருபர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:-

ஓ.பி.எஸ். அணியில் இருந்து எங்கள் அணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வரத் தயாராக இருக்கிறார்கள். அமைச்சர்கள், எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஓ.பி.எஸ். அணிக்கு செல்ல தயாராக இல்லை.

ஓ.பன்னீர்செல்வத்தை திருப்திபடுத்துவதற்காக செம்மலை இதுபோன்ற கருத்துக்களை கூறியுள்ளார். அதில் உண்மை இல்லை.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அமைதியான முறையில் உள்ளது. சசிகலாதான் கட்சியை நடத்துகிறார் என்று கூறுவது முற்றிலும் தவறானது. அதில் உண்மை இல்லை.

இளைஞர் நலனுக்காக ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயிற்சி வீரர்களுக்கு உயிர் காக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com