ஊரடங்கை முறையாக‌ கடைபிடிக்கும் மக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு- அமைச்சர் சீனிவாசன் தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரசை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முறையாக‌ கடைபிடிக்கும் மக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
அமைச்சர் சீனிவாசன்
அமைச்சர் சீனிவாசன்
Published on

திண்டுக்கல்:

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். ஏழை மக்களின் நலனுக்காக அம்மா உணவகத்தில் மிகக்குறைந்த விலையில் 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது.

மேலும் காய்கறிகள், மளிகை பொருட்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான 39 வகையான மளிகை பொருட்கள், 13 வகையான காய்கறி தொகுப்புகளை வழங்கும் சிறப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மளிகை தொகுப்பில் 39 பொருட்கள் இடம்பெற்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.2 ஆயிரம்.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே 9944068076 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்புகொண்டு இந்த தொகுப்புகளை பெறலாம். அத்துடன் நடமாடும் காய்கறி கடைகள் மூலமும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை பெறலாம்.

அப்போது ஊரடங்கை முறையாக பின்பற்றி சமூக இடைவெளியை கடை பிடித்ததற்காக பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படும். பின்னர் இந்த டோக்கன்கள் அனைத்திற்கும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். அதன்படி முதல் பரிசாக குளிர்சாதன பெட்டியும், இரண்டாம் பரிசாக 2 நபர்களுக்கு பீரோவும், 3ம் பரிசாக 3 நபர்களுக்கு குக்கரும், சிறப்பு பரிசாக 108 பேருக்கு சேலையும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com