ஜம்மு ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்-அதிகாரி உள்பட 3 பேர் காயம்

ஜம்முவில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜூனியர் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்-அதிகாரி உள்பட 3 பேர் காயம்
Published on

ஜம்முவில் உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமின் பின்புறம் வீரர்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த வழியாக இன்று அதிகாலையில் தீவிரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் உள்ளே வந்து துப்பாக்கியால் சுட்டதில், ஜூனியர் அலுவலர் மற்றும் அவரது மகள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் மற்ற வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். அத்துடன் தீவிரவாதிகளை குடியிருப்பின் ஒரு பகுதிக்கு விரட்டிச் சென்று சுற்றி வளைத்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

தீவிரவாதிகள் தாக்கியதில் காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com