பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது

பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்க உள்ளதாக உறுப்பினர் சேர்க்கைக்கான குழுவின் அமைப்பாளர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது
Published on

புதுடெல்லி,

பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை, ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 10-ந் தேதி வரை அப்பணி நீடிக்கும். இத்தகவலை உறுப்பினர் சேர்க்கைக்கான குழுவின் அமைப்பாளர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை 20 சதவீதம் (2 கோடியே 20 லட்சம்) உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கவனம் செலுத்தப்படும். ‘மிஸ்டு கால்’ மூலமும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். தீவிர உறுப்பினர் சேர்க்கை ஆகஸ்டு 16-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும்’’ என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com