பிக் பாஷ் டி20 லீக்: மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்

பிக் பாஷ் டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ். #BigBashLeague
பிக் பாஷ் டி20 லீக்: மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்
Published on

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில் சிக்கிய மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 

இறுதியில், மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி 19.3 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக மொகமது நபி 28 ரன்னும், டாம் கூப்பர் 24 ரன்னும் எடுத்தனர்.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் சார்பில் ஸ்டோனிஸ் 3 விக்கெட்டும், ஜாக்சன் பேர்ட், பிளங்கெட், சம்பா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் மார்க் ஸ்டோனிசின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் 124 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோனிஸ் 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். #BigBashLeague

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com