டிரம்ப் கையை மீண்டும் தட்டி விட்ட மனைவி மெலானியா - வீடியோ இணைப்பு

ரோம் விமான நிலையத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையை அவரது மனைவி மெலானியா கைபிடிக்க மீண்டும் மறுத்துவிட்டார். இரண்டாவது முறையாக டிரம்ப் கையை மெலானியா உதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் கையை மீண்டும் தட்டி விட்ட மனைவி மெலானியா - வீடியோ இணைப்பு
Published on

அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் முதல் வெளிநாட்டு பயணமாக சவுதி அரபேியா சென்றார். அங்கிருந்து இஸ்ரேல் நாட்டுக்கு புறப்பட்டார். அந்நாட்டு தலைநகர் டெல்அவிவ் அருகே லோட் என்ற இடத்தில் உள்ள பென் குரியான் சர்வதேச விமான நிலையத்தில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

 அப்போது தனக்கு பின்னால் வந்த மனைவி மெலானியாவின் கையை பிடிக்க டிரம்ப் முயற்சிக்க, அதை மெலானியா வெடுக்கென்று தட்டி விட்ட சம்பவம் பலர் முன்னிலையில் சென்றது. அதே நேரத்தில் இஸ்ரேல் பிரதம்ர் பெஞ்சமின் நேதன்யாகு தன் மனைவி சாராவுடன் கைகோர்த்தபடி சிவப்பு கம்பளத்தில் கம்பீரமாக சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com