மனசாட்சிபடி வாக்களித்தால் மீராகுமார் வெற்றி பெறுவார்: நாராயணசாமி பேட்டி

ஜனாதிபதி தேர்தலில் மனசாட்சிபடி வாக்களித்தால் மீராகுமார் வெற்றி பெறுவார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
மனசாட்சிபடி வாக்களித்தால் மீராகுமார் வெற்றி பெறுவார்: நாராயணசாமி பேட்டி
Published on

புதுச்சேரி:

ஜனாதிபதி தேர்தலையொட்டி புதுவை சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தல் கொள்கை ரீதீயிலான போராட்டம். காங்கிரஸ்- பாரதீயஜனதா வேட்பாளர்களிடையே 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்தான் உள்ளது. மனசாட்சிபடி வாக்களியுங்கள் என்று காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வாக்களித்தால் மீராகுமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com