மாநிலங்களவையில் வைகோ உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவி ஏற்றனர்

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் வைகோ உள்ளிட்ட எம்.பி.க்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றனர்.
பதவியேற்ற வைகோ
பதவியேற்ற வைகோ
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5  மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், மாநிலங்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. மற்றும் திமுக எம்பிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி, தி.மு.க. சார்பில் தேர்வான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதவியேற்றுக் கொண்டார். திமுக சார்பில் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் பதவியேற்றனர்.

இதேபோல், அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகர் மற்றும் மொகமது ஜான் ஆகியோரும் பதவியேற்று கொண்டனர். தமிழக எம்பிக்கள் அனைவரும் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com