ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தம்: மார்கஸ் ஸ்டாய்னிஸ்க்கு இடமில்லை

ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் புதி வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் மேத்யூ வடே, ஜோ பேர்ன்ஸ் உள்ளிட்ட ஐந்து பேர் இடம் பெறவில்லை.
மேத்யூ வடே, மார்கஸ் ஸ்டாய்னிஸ்
மேத்யூ வடே, மார்கஸ் ஸ்டாய்னிஸ்
Published on

ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் டெஸ்ட் அணி துணைக் கேப்டன் டிராவிஸ் ஹெட், ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பேட்ஸ்மேன் ஜோ பேர்ன்ஸ், விக்கெட் கீப்பர் மேத்யூ வடே ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கிய கேமரூன் க்ரீன் இடம் பிடித்துள்ளார். ஒப்பந்தத்தில் இடம்பெற்ற புதிய வீரர் இவர் மட்டுமே.

ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ள வீரர்கள்:-

1. ஆஷ்டோன் அகர், 2. அலேக்ஸ் கேரி, 3. பேட் கம்மின்ஸ், 4. ஆரோன் பிஞ்ச், 5. கேரூன் க்ரீன், 6. ஜோஷ் ஹசில்வுட், 7. மார்னஸ் லாபஸ்சேன், 8. நாதன் லயன், 9. மேக்ஸ்வெல், 10. டிம் பெய்ன், 11. ஜேம்ஸ் பேட்டின்சன், 12. ஜை ரிச்சர்ட்சன், 13. கேன் ரிச்சர்ட்சன், 14. ஸ்டீவ் ஸ்மித், 15. மிட்செல் ஸ்டார்க், 16. டேவிட் வார்னர், 15. ஆடம் ஜம்பா.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com