கருணாநிதியின் உடல்நிலையை விசாரிக்க சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #KarunanidhiHealth #Karunanidhi #DMK #MamataBanerjee
கருணாநிதியின் உடல்நிலையை விசாரிக்க சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி
Published on

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே சமயம் கருணாநிதியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் அழுதபடி வருவதை கண்ட தொண்டர்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதேசமயம் கருணாநிதி குணமடைந்து மீண்டு வரவும் பிரார்த்தனை மேர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய இன்று சென்னை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KauveryHospital #KarunanidhiHealth #Karunanidhi #DMK #MamataBanerjee

X

Maalai Malar
www.maalaimalar.com