ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்- சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கில் டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் டிஜிபி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் பணப்பட்டுவாடாவை தடுக்க, புதிய விதிமுறைகளை உருவாக்ககோரியும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, காவல்துறை டிஜிபி, அபிராமபுரம் காவல் நிலையம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com