இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் குக்கர் சின்னத்தை முடக்கி விட்டனர்- தினகரன் குற்றச்சாட்டு

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் மோடியுடன் பேசி குக்கர் சின்னம் கிடைக்காதவாறு முடக்கியுள்ளதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran #EPS #OPS
பொன்னேரியில் தினகரன் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்.
பொன்னேரியில் தினகரன் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்.
Published on

பொன்னேரி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பொன்னேரியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து மக்களும் ஐ.பி.எல். விளையாட்டை பார்ப்பது போல ஆவலுடன் எதிர்பார்த்து செய்திகளை பார்த்தனர்.

குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைத்து விட்டால் பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடுவோம் என அஞ்சி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் மோடியுடன் பேசி சின்னம் கிடைக்காதவாறு முடக்கியுள்ளனர்.

ஆர்.கே. நகரில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை போல அனைத்து தொகுதியிலும் சுயேச்சை சின்னத்தில் வெற்றி பெறுவோம். எங்களுக்கு சின்னம் என்பது முக்கியமல்ல மக்களின் எண்ணம் தான் முக்கியம்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் பதவி அளித்தவர்களுக்கு துரோகம் செய்தவர்கள், மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தவர்கள்.

அ.தி.மு.க. கூட்டணி தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. 1 தொகுதியில் கூட அவர்களால் ஜெயிக்க முடியாது என்பதால் தான் கர்நாடகா மாநில நலனில் மட்டுமே அவர்கள் அக்கறை செலுத்துகிறார்கள்.

இவ்வாறு தினகரன் பேசினார்.  #TTVDhinakaran #EPS #OPS

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com