அத்வானி தொகுதியில் அமித் ஷா போட்டியிட குஜராத் பாஜகவினர் விருப்பம்

பாராளுமன்ற தேர்தலில் அத்வானி எம்.பி.யாக உள்ள காந்திநகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிட வேண்டும் என குஜராத்தில் உள்ள பாஜக பிரமுகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். #LSpoll #BJPworkers #AmitShah #Advani #GandhinagarLSpoll
அத்வானி தொகுதியில் அமித் ஷா போட்டியிட குஜராத் பாஜகவினர் விருப்பம்
Published on

அகமதாபாத்:

பாஜக மூத்த தலைவரான லால் கிஷன் அத்வானி  குஜராத்தில் உள்ள காந்திநகர்  பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அமித் ஷா போட்டியிட வேண்டும் என இம்மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, காந்திநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேஜல்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் கிஷோர் சவுகான் கூறுகையில், ‘தேசிய தலைவரான அமித் ஷா, காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருமனதாக விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தை மாநில தேர்தல் பார்வையாளர்களுக்கு நாங்கள் தெரிவித்திருக்கிறோம்.

காந்திநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சார்கேஜ் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக முன்னர் பதவி வகித்தவர் என்ற வகையில் இங்குள்ள அனைவரையும் அமித் ஷாவுக்கு நன்றாக தெரியும்’ என குறிப்பிட்டார்.

இதே கருத்தை வலியுறுத்திய பாஜக தேர்தல் பார்வையாளர்களில் ஒருவரான பிரிதிவிராஜ் பட்டேல்,  காந்திநகர் தொகுதியில் போட்டியிட இதுவரை யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே இங்கு அமித் ஷா போட்டியிட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி 1991, 1996 நீங்கலாக காந்திநகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #LSpoll #BJPworkers #AmitShah #Advani  #GandhinagarLSpoll

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com