அரச்சலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

அரச்சலூர் அருகே கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரச்சலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி
Published on

அரச்சலூர்:

அரச்சலூர் அருகே உள்ள பள்ளியூத்து பூலக்காட்டை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சேதுபதி (வயது18). இதேபோல் பள்ளியூத்து மேட்டூர் மந்தையை சேர்ந்த கருப்பன் என்பவரின் மகன் அஜித் (20).

வாலிபர்கள் சேதுபதியும், அஜித்தும் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பாடி கட்டும் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.

இவர்கள் அடிக்கடி பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் செல்வார்கள். அதேபோல் இன்று காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் இன்று காலை 9.30 மணி அளவில் பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அரச்சலூர் அருகே கார வாய்க்கால் பக்கம் வந்த போது எதிரே ஒரு லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் சேதுபதிக்கும், அஜித்துக்கும் தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சம்பவ இடத்துக்கு அரச்சலூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இருவரது உடல்களையும் மிட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் பள்ளியூத்து பகுதியில சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பும் நிலவியது.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பெற்றோரும் உறவினர்களும் சென்று கதறியபடி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com