கண்ணமங்கலம் அருகே லாரி மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி

கண்ணமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜம்பு
ஜம்பு
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு வேட்டகிரிபாளையம் நொளம்பை பகுதியை சேர்ந்தவர் ஜம்பு (வயது 45). அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி. இவர் தனது மனைவி ரத்னாவுடன் (40) மோட்டார் சைக்கிளில் குப்பம் கிராமம் வழியாக கண்ணமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது குப்பம் வீரகோயில் அருகே உள்ள வளைவில் வந்தபோது, எதிரே வேகமாக வந்த லாரி, ஜம்பு ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜம்பு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்துவிட்டார். அவரது மனைவி ரத்னா காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்தில் தனது கண்முன் இறந்த கணவனின் உடலை பார்த்து ரத்னா கதறி அழுதார்.

தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜம்புவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஜம்புவின் உடலருகே அவரது மனைவி ரத்னா கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com