பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர் 6,83,697 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி
Published on

பெரம்பலூர்:

தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

பெரம்பலூர் தொகுதியில் 13,91,011 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,94,659 வாக்குகள் பதிவானது.

இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 2,80,179 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தி 53,545, அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 45,591 வாக்குகள் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com