மோசமாக விளையாடும் வார்னருக்கு ரெஸ்ட் கொடுத்தது ஆஸ்திரேலியா

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோசமாக விளையாடி வரும் வார்னருக்கு ஓய்வு கொடுத்துள்ளது ஆஸ்திரேலியா. #AUSvNZ #Warner
மோசமாக விளையாடும் வார்னருக்கு ரெஸ்ட் கொடுத்தது ஆஸ்திரேலியா
Published on

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 2-வது போட்டி நேற்று முன்தினம் மொல்போர்னில் நடைபெற்றது. இதன்பின் ஆஸ்திரேலியா வருகிற 16-ந்தேதி தனது கடைசி லீக்கில் நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் நியூசிலாந்தில் நடக்கிறது. இரண்டு போட்டிகளுக்கும் இடையில் சுமார் 6 நாட்கள் இடைவெளி உள்ளதால் வார்னருக்கு இடைப்பட்ட நாளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஆலன் பார்டர் விருது வழங்கும் விழா மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. அதன்பின் சொந்த நகரான சிட்னிக்கு செல்கிறார். சிட்னியில் ஓய்வெடுக்கும் வார்னர் நியூசிலாந்துக்கு எதிராக 16-ந்தேதி நடக்கும் போட்டிக்கு முன் அணியுடன் இணைகிறார்.

இதுகுறித்து தலைமை பயிற்சியாளர் லீமென் கூறுகையில் ‘‘அவருக்கு சில நாட்கள் ஓய்வு கொடுத்துள்ளோம். இது சவாலானதுதான். ஆனால், அணிக்கு திரும்பியதும் வார்னர் கேப்டனாக செயல்படுவார். இதனால் ஓய்வு முடிந்து போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாள் நியூசிலாந்து செல்வார்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com