இந்தியாவில் லெக்சஸ் NX 300h அறிமுகம்: விலை மற்றும் முழு தகவல்கள்

லெக்சஸ் இந்தியா நிறுவனம் புதிய NX 300h மாடல் எஸ்.யு.வி.-யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் லெக்சஸ் NX 300h அறிமுகம்: விலை மற்றும் முழு தகவல்கள்
Published on

லெக்சஸ் இந்தியா நிறுவனம் NX 300h எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் லெக்சஸ் NX 300h விலை ரூ.53.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது.

புதிய லெக்சஸ் NX 300h முற்றிலும் அழகிய தோற்றம் கொண்டுள்ளது. முன்னதாக நவம்பர் 17-இல் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட லெக்சஸ் NX 300h டாப் என்ட் மாடல்: F-ஸ்போர்ட் விலை ரூ.55.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லெக்சஸ் NX 300h மாடலில் 2.5 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டுள்ளது. இதன் ஒருங்கிணைந்த செயல்திறன் 194 பி.எச்.பி. பவர் மற்றும் 210 என்.எம். டார்கியூ கொண்டுள்ளது. இந்த இன்ஜின் E-CVT கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த மாடல் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.2 நொடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்பக்கம் ஸ்பின்டிள் கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பகலில் எரியும் எல்இடி மின்விளக்கு, ஃபாக் லேம்ப், L-வடிவிலான பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டுகளில் ஃபிளேர் செய்யப்பட்ட வீல் ஆர்ச், பின்புறம் ராப்-அரவுண்டு டெயில் லைட் மற்றும் ரேக்டு விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

உள்புறம் 360 கோண பானாரோமிங் சரவுண்டு வியூ மாணிட்டர், கலர் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 10.3 இன்ச் ஸ்ப்லிட் ஸ்கிரீன் மல்டிமீடியா டிஸ்ப்ளே, முதல் தர ஃபோல்டிங் மற்றும் பவர் ரீசைக்லிங் பின்புற சீட் மற்றும் 14 இன்ச் ஸ்பீக்கர், ஹைஃபை மார்க் லெவின்சன் மற்றும் கிளாரிஃபை தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com