வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் அசார் அலி 122 ரன்னுடனும், மிஸ்பா உல்-ஹக் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் அசார் அலி சதம்
Published on

பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டோமினிகாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டெஸ்ட் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி மதிய உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன் எடுத்து இருந்தது.

இடைவேளையின் போது மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 69 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ஷான் மசூத் 9 ரன்னிலும், பாபர் அசாம் 55 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் அசார் அலி 85 ரன்னுடனும், யூனிஸ்கான் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய யூனிஸ்கான் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து கேப்டன் மிஸ்பா உல்-ஹக், அசார் அலியுடன் இணைந்தார். நிலைத்து நின்று ஆடிய அசார் அலி சதம் அடித்தார். அவர் அடித்த 14-வது சதம் இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com