தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசத்துக்கு பெரியார் விருது- கி.வீரமணி வழங்கினார்

பெரியார் திடலில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசத்துக்கு பெரியார் விருதை கி. வீரமணி வழங்கினார்.
வி.ஜி. சந்தோசத்துக்கு பெரியார் விருதை கி.வீரமணி வழங்கிய காட்சி.
வி.ஜி. சந்தோசத்துக்கு பெரியார் விருதை கி.வீரமணி வழங்கிய காட்சி.
Published on

சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் திராவிடர் திருநாள் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் வீர விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமிகள் நெருப்புடன் கூடிய சிலம்பத்தை சுழற்றி சாகசம் செய்தனர். இதைத்தொடர்ந்து சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிளாக் பாய்ஸ் குழுவினரின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், பெரியார் திடலில் உள்ள ராதாமன்றத்தில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், பேராசிரியர் கருணானந்தம் ஆகியோருக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் விருது வழங்கி பாராட்டினார்.

இதில், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், அரசு செல்லையா, மணியம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com