கருப்பு நிறத்தில் மிரட்டும் கேடிஎம் ஆர்சி 200 இந்தியாவில் வெளியானது

கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி 200 மோட்டார்சைக்கிள் புதிதாய் கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கருப்பு நிறத்தில் மிரட்டும் கேடிஎம் ஆர்சி 200 இந்தியாவில் வெளியானது
Published on

ஆஸ்த்ரியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான கேடிஎம் இந்தியாவில் கருப்பு நிறம் கொண்ட ஆர்சி 200 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

முன்னதாக வெள்ளை நிறத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த சூப்பர்ஸ்போர்ட் ஆர்சி 200 இனி கருப்பு நிறத்திலும் கிடைக்கும். இது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஆர்சி 390 மோட்டார்சைக்கிளின் கருப்பு நிறம் போன்றே காட்சியளிக்கிறது. 

எனினும் இதன் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற மட்டும் வேறுபடுகிறது. கேடிஎம் ஆர்சி 200 பிளாக் நிற எடிஷனின் டெயில் பகுதியில் வெள்ளை நிற கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. புதிய நிறத்தை தவிர கேடிஎம் ஆர்சி 200 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில் கேடிஎம் ஆர்சி 200 வழக்கமான 199.5சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 25 பிஹெச்பி பவர், 19.2 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. செயல்திறன் மிக்க இன்ஜினுடன் பல்வேறு பிரீமியம் அம்சங்களை கொண்டுள்ளது.

கேடிஎம் ஆர்சி 200 மாடலின் முன்பக்கம் அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவற்றின் இந்தியா மாடலில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படவில்லை.

இத்துடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், க்ளிப்-ஆன் ஹேன்டிள்பார், அன்டர்பெல்லி எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 2017 மாடலில் அகலமான ரியர் வியூ கண்ணாடிகள், மேம்படுத்தப்பட்ட குஷன் இருக்கை கொண்டுள்ளது. கேடிஎம் ஆர்சி 200 கருப்பு நிற எடிஷன் நாடு முழுக்க இயங்கி வரும் விற்பனையகங்களில் முன்பதிவு செய்ய முடியும்.

இந்தியாவில் கேடிஎம் ஆர்சி 200 கருப்பு நிற எடிஷன் விலை ரூ.1.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com