முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
கேஎஸ் அழகிரி
கேஎஸ் அழகிரி
Published on

தூத்துக்குடி:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சி மெச்சக்கூடிய ஆட்சியாக இல்லை. எந்த துறையிலும் முத்திரை பதிக்கவில்லை. பொருளாதாரத்தை பாழ்படுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் தெரிந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல், தமிழ் தெரியாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறார்கள். நாடு ஆபத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

வெளிநாடு சென்று உள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் நலனுக்காக அதிக முதலீடுகளை ஈர்த்தார் என்றால் காங்கிரஸ் அதனை வரவேற்கும். இருப்பினும் கடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கேள்வித்தாளில் தலித், முஸ்லிம்கள் குறித்து தவறான கருத்துகள் இருந்தது. இது பா.ஜனதா கட்சியின் சனாதன ஆட்சி என்பதற்கு ஒரு உதாரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com