ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை தினகரனிடம் கொடுத்தது விவேக் தான்: கிருஷ்ணப்பிரியா

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்தது விவேக் தான் என கிருஷ்ணப்பிரியா கூறியுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை தினகரனிடம் கொடுத்தது விவேக் தான்: கிருஷ்ணப்பிரியா
Published on

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், இதுபற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரித்து வருகிறது. 

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது எடுத்ததாக கூறப்படும் வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை தினகரனிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும், அவர் தங்களிடம் கேட்காமல் வெளியிட்டதாகவும் இளவரசியின் மகளான கிருஷ்ணப்பிரியா கூறியிருந்தார். ஆனால், வீடியோ வெளியிட்டது தனக்கும் தெரியாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை விவேக்தான் காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்ததாக கிருஷ்ணப்பிரியா கூறினார். 

வீடியோவைக் கொடுத்தது நாங்கள்தான் என்று கூறினேனே தவிர, நான் என கூறவில்லை. ஓ.பி.எஸ். விசாரணை கமிஷன் கேட்டதால் தேவைப்படலாம் என சசிகலா கூறினார். அதனால், வீடியோ பதிவை காப்பி எடுத்து தினகரனிடம் கொடுக்கப்பட்டிருந்தது என்றும் கிருஷ்ணப்பிரியா தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com