கொண்டலாம்பட்டி அருகே ஆட்டோ மோதி பெண் பலி

கொண்டலாம்பட்டி அருகே ஆட்டோ மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி அருகே ஆட்டோ மோதி பெண் பலி
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்காரப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி கமலா.

இந்த நிலையில் சம்பவத்தன்று கமலாவும் அவருடைய பேரன் தமிழ் செல்வனும் மோட்டார் சைக்கிளில் சீலநாயக்கன் பட்டியில் இருந்து கொண்டலாம்பட்டியை நோக்கி சென்றனர். அப்போது காட்டூர் பிரிவு ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஆட்டோ திடீரென அவர்கள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த கமலா கீழே தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து சேலம் தெற்கு போக்குவரத்து பிரிவு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com