கிணத்துக்கடவு அருகே கல்லுக்குழியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

கிணத்துக்கடவு அருகே கல்லுக்குழியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே கல்லுக்குழியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
Published on

கோவை:

கோவை துடியலூர் அருகே உள்ள சேரன் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீ கண்ணன். இவரது மகன் விக்னேஷ் (வயது 21). இவர் மலுமச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் கிணத்துக்கடவு அருகே சந்திராபுரத்தில் உள்ள கல்லுக்குழிக்கு குளிப்பதற்காக சென்றார்.

அங்கு நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக குளித்துக்கொண்டு இருந்த போது திடீரென நீரில் மூழ்கினார்.இதனை பார்த்த அவரது நண்பர்கள் விக்னேசை போராடி மீட்டனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com