கத்திப்பாரா ஜனார்த்தனன் பிறந்த நாளையொட்டி சிறப்பு தபால் தலையை ஜி.கே.வாசன் வெளியிட்டார்

கத்திப்பாரா ஜனார்த்தனன் பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை ஜி.கே.வாசன் வெளியிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கத்திப்பாரா ஜனார்த்தனன் பிறந்த நாளையொட்டி சிறப்பு தபால் தலையை ஜி.கே.வாசன் வெளியிட்டார்
Published on

சென்னை:

தமிழ்நாடு மண் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் நலச்சங்க தலைவரும் த.மா.கா. துணை தலைவருமான கத்திப்பாரா ஜனார்த்தனனின் 70-வது பிறந்த நாள் விழா மற்றும் அவரது 50 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கான பாராட்டு விழா கத்திப்பாரா இல்லத்தில் நடந்தது. விழாவுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

மூத்த துணை தலைவர் ஞானதேசிகன் முன்னிலை வகித்தார். விழாவில் கத்திப்பாரா ஜனார்த்தனன் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அவரது உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை ஜி.கே.வாசன் வெளியிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் த.மா.கா. நிர்வாகிகள் கோவை தங்கம், விடியல் சேகர், முனவர் பாட்ஷா, சக்திவடிவேல், சுரேஷ் மூப்பனார், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கொட்டிவாக்கம் முருகன், பிஜு சாக்கோ, அருண்குமார், ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத், சங்க நிர்வாகிகள் ராஜசேகர், குருபரன் ஜெயக்குமார், அத்திப்பட்டு கார்த்திகேயன், எக்ஸ்பிரஸ் எல்லப்பன் உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விழா ஏற்பாடுகளை த.மா.கா. பொதுச்செயலாளர் திருவேங்கடம் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com