கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு: மு.க.அழகிரி சென்னை புறப்பட்டார்

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது மகன் மு.க.அழகிரி மதுரையில் இருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார். #Karunanidhi #DMK #MKAlagiri
கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு: மு.க.அழகிரி சென்னை புறப்பட்டார்
Published on

மதுரை:

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

பின்னர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் பூரண குணம் அடைவார் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி நேற்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து உறவினர்களிடம் விசாரித்தார்.

இன்று காலை 5 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு காரில் மு.க.அழகிரி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்ஷா, முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் மண்டலத்தலைவர் சின்னான் மற்றும் முபாரக் மந்திரி, கோபிநாதன், எம்.எல்.ராஜ், இசக்கிமுத்து உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

10-க்கும் மேற்பட்ட கார்களில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னை சென்றார். #Karunanidhi #DMK #MKAlagiri

X

Maalai Malar
www.maalaimalar.com