கோபாலபுரம், சிஐடி காலனி, ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை

கோபாலபுரம், சிஐடி காலனி, ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை

உடல்நிலைக்குறைவால் இன்று காலமான திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கோபாலபுரம், சிஐடி காலனி, ராஜாஜி ஹால் ஆகிய இடங்களில் இறுதி மரியாதை செய்யப்பட உள்ளது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்
Published on

சென்னை:

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல் இன்று இரவு 8.30 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அங்கு இரவு 1 மணி வரையிலும், அதன் பின்னர் சிஐடி காலனி கொண்டு செல்லப்படும் அவரது உடலுக்கு அதிகாலை 3 மணி வரையிலும் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்துவார்கள் என திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதன் பின்னர், நாளை அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட உள்ள அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com