கர்நாடகத்தில் ஜூலை 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு

கர்நாடகத்தில் ஜூலை 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவிகள்
பள்ளி மாணவிகள்
Published on

பெங்களூரு:

கொரோனா நோய் உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வருகிறது. இதை தடுக்க இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடகத்தில் ஜூலை 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் ஜூலை 1-ந்தேதியில் இருந்து 4 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்படும் என்றும் 1 முதல் 3ஆம் வகுப்பு, 8 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூலை 15ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com