கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி 400 காங்கிரசார் மனு

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் இன்று கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்பட 400 பேர் மனுதாக்கல் செய்தனர்.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

சுப்ரீம்கோர்ட்டில் இன்று கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனில் சாக்கோ ஜோசப் என்பவர் உள்பட 400 பேர் மனுதாக்கல் செய்தனர்.

கர்நாடகாவில் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கும் வகையில் குற்றம் செய்துள்ளனர். எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து நடத்தப்படும் விசாரணை குறுகிய காலத்துக்குள் திட்டமிட்டபடி நடத்த முடியாது. எனவே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு 400 காங்கிரசார் தங்களது மனுக்களில் கூறியுள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக 2 மனுக்கள் விசாரிக்கப்படுகிறது. அந்த மனுக்களுடன் இந்த மனுவும் விசாரிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com