கர்நாடக தேர்தல் - இரண்டாவது தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் சித்தராமையா

கர்நாடக சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிட உள்ள முதல்வர் சித்தராமையா பதாமி தொகுதிக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #KarnatakaElections2018 #Siddaramaiah
கர்நாடக தேர்தல் - இரண்டாவது தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் சித்தராமையா
Published on

பெங்களூர்:

கர்நாடக மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பா.ஜ.க ஆட்சியை பிடிக்கவும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி எல்லா தொகுதிகளுக்குமான வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளது.

முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி மற்றும் பதாமி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட உள்ளார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஏற்கனவே அவர் வேட்புமனு தாக்கல் செய்து விட்ட நிலையில், பதாமி தொகுதிக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிட உள்ள ஸ்ரீராமுலு இன்று காலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElections2018 #Siddaramaiah

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com