குமரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் மழை

குலசேகரம், திருவட்டார், கன்னிமார் பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் மழை
Published on

நாகர்கோவில்:

குலசேகரம், திருவட்டார், கன்னிமார் பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கன்னிமாரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவானது.

அடையாமடை, கோழிப் போர்விளை, பூதப்பாண்டி, தக்கலை, களியல் மற்றும் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை நீடித்தது.

அணைகளின் நீர்மட்டம் ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் அணையை பொதுப்பணித் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய நீர்வரத்திற்கேற்ப அவ்வப்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.20 அடியாக உள்ளது. அணைக்கு 226 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75 அடியாக இருந்தது. அணைக்கு 726 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சிற்றாறு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி உள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பெருஞ்சாணி-48.2, சிற் றாறு-1-11.4, சிற்றாறு-2-30.4, மாம்பழத்துறையாறு-55, புத்தன் அணை-47.4, ஆணைக்கிடங்கு-49, அடை யாமடை-8, கோழிப்போர் விளை-55.4, களியல்-24.8, தக்கலை-21, கன்னிமார்-91, சுருளோடு-77, பூதப் பாண்டி-18.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com