தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது - ரஜினி கருத்தை வரவேற்ற கமல்ஹாசன்

தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற நடிகர் ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசன்
கமல் ஹாசன்
Published on

சென்னை:

தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற நடிகர் ரஜினியின் கருத்தை வழிமொழிவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன்.

ஊராட்சிக்கும், மாநகராட்சிக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்கு தெரியும்.

முதல்வர் பழனிசாமி என்னைப் பற்றி பேசியது அவரது கருத்து. தமிழகத்தில் தற்போது வெற்றிடம் என்பது உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com