டிடிவி தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு ஆதரவு

முதல்வரின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு திடீரென அணி மாறினார். அவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #KallakurichiMLA #ADMK
டிடிவி தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு ஆதரவு
Published on

முதல்வரின் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு, சென்னையில் இன்று டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். அப்போது அவர் டிடிவி தினகரனுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை வழிநடத்துவதற்கு மக்கள் ஆதரவு பெற்ற டி.டி.வி. தினகரன் பின்னால் செல்ல வேண்டும். அதனால் அவருக்கு ஆதரவு அளித்துள்ளேன். மக்கள் ஆதரவு டிடிவி தினகரனுக்கு உள்ளது என்பது ஆர்.கே. நகர் தேர்தலிலேயே தெரிந்தது.

தற்போது அ.தி.மு.க.வில் இருந்து மக்கள் சேவையை சரிவர செய்ய முடியவில்லை. எம்.எல்.ஏ. பணியை செய்வதற்கு மாவட்டத்திலேயே பல முட்டுக்கட்டைகள் போடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் என்ன பிரச்சனை என்பது முதல்வருக்கே தெரியும். கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கி தர வேண்டும். எனக்கும் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை.

கட்சி பிரிந்தபோது டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 பேரில் யாராவது ஒருவர் முதல்வர் ஆவதற்கு  வாய்ப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com