தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர் - கலைச்செல்வன் எம்எல்ஏ

சென்னையில் முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன் எம்.எல்.ஏ., மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர் என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன்
செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன்
Published on

சென்னை:

தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதனையடுத்து, கலைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

நான் எப்போதும் அதிமுகவுக்கு ஆதரவாக தான் இருப்பேன். ஜெயலலிதா அமைத்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற தினகரனின் எண்ணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

அதிமுக தலைமை மீது யாருக்கும் கோபமில்லை. எங்களுக்குள் இருந்தது அண்ணன்-தம்பி பிரச்சனைதான். ஆட்சி கலைப்புக்கு யாரும் உடன்படமாட்டார்கள். முதல்வர் பழனிசாமி சொல்வதை கேட்டு செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com