காலா படம் நல்ல லாபத்தை தந்துள்ளது - தயாரிப்பாளர் தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படம் நல்ல லாபத்தை தந்துள்ளது. படம் குறித்து வெளிவரும் எதிர்மறை செய்திகளில் உண்மையில்லை என தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார். #Rajinikanth #Kaala #WunderbarFilms #Dhanush
காலா படம் நல்ல லாபத்தை தந்துள்ளது - தயாரிப்பாளர் தனுஷ்
Published on

சென்னை:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மருமகன் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் காலா. கடந்த மாதம் 7-ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதை அடுத்து காலா படத்துக்கு சில கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, காலா படம் நஷ்டத்தை தந்திருப்பதாகவும், சுமார் 40 முதல் 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை தயாரிப்பாளர் தனுஷ் செட்டில் செய்ய முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், காலா படம் நல்ல லாபத்தை தந்துள்ளது என வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், காலா படம் எங்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. படம் குறித்து எதிர்மறையாக வெளிவரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையில்லை. வுண்டர்பார் நிறுவனத்துக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த ரஜினிக்கு நன்றி. இந்த படத்தை வெற்றி படமாக்க்கிய ரசிகர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். #Rajinikanth #Kaala #WunderbarFilms #Dhanush

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com