கானாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற முடியும்: ஜியாக்சன் பேட்டி

கடைசி லீக் ஆட்டத்தில் கானாவை (நாளை) எதிர்கொள்கிறோம். இதில் எங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறோம் என்று இந்தியாவுக்காக முதல் கோல் அடித்த ஜியாக்சன் பேட்டியளித்துள்ளார்.
கானாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற முடியும்: ஜியாக்சன் பேட்டி
Published on

புதுடெல்லி :

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிடம் தோல்வி அடைந்தது. இந்திய தரப்பில் ஜியாக்சன் சிங் கோல் அடித்தார்.

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் கோல் போட்ட முதல் இந்தியர் என்ற அரிய சிறப்பை பெற்ற மணிப்பூரைச் சேர்ந்த ஜியாக்சன் சிங் கூறுகையில், ‘இது போன்று கோல் அடிக்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்கப்போவதில்லை. இதனால் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் பரவசத்திற்குள்ளானேன். வெற்றி பெற்றிருந்தால் இன்னும் தித்திப்பாக இருந்திருக்கும். கோல் அடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்த சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

மேலும் அவர், ‘கடைசி லீக் ஆட்டத்தில் கானாவை (நாளை) எதிர்கொள்கிறோம். இதில் எங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறோம். வெற்றிக்காக ஒருங்கிணைந்து கடுமையாக போராடுவோம்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com